Breaking News
Home / Tamil General Posts / சந்தோஷம் கடையில் விற்கும் பொருள் இல்லை !

சந்தோஷம் கடையில் விற்கும் பொருள் இல்லை !

நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் அடுத்தவனை வீழ்த்தி அதில் சந்தோஷபட ஆசைப்படுவதுதான் நியாயமற்றது.

மற்றும் நாம் நம்மை மற்றவரிடம் ஒப்பிடும்போதும் அது “பணம், பொருள், அழகு, அறிவு” எதுவாக இருந்தாலும் சரி.

கவலைப்படுவதற்கான விஷயங்களை தேடித்தேடி கவலைப்பட தெரிந்த நமக்கு. சந்தோஷம் என்பது நாம் தேடவேண்டியதில்லை நமக்குள்ளேயேதான் இருக்கிறது என்பதை அறிய தவறிவிடுகின்றோம்.

நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்ற நினைப்பில்தான் சதோஷம் இருக்கின்றது. அதைவிட்டு மற்றவர்களிடம் உள்ள நம்மிடம் இல்லாதவற்றில்தான் சந்தோஷம் இருக்கின்றது என எண்ணி ஏங்கி பரிதவிப்பதிலும் நாம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பரவாயில்லை அடுத்தவன் கட்டாயம் வீழவேண்டும் என எண்ணி துவேஷம் கொள்வதிலும் நமது நேரத்தை வீணடித்து கவலைகளை பெருக்கிக்கொள்கின்றோம்.

உண்மையான நமது சந்தோஷம் என்பது அடுத்தவன் பொருட்களிலோ அடுத்தவனின் வீழ்ச்சியிலோ இருப்பதாக எண்ணி உண்மையாக நம்மிடமே உள்ள சந்தோஷத்தை தொலைத்தே விடுகின்றோம். சந்தோஷத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் நாம் அதனை வெளியே தேடிக்கொண்டிருக்க தேவையில்லை.

எங்கள் பதிவுகள் உங்களுக்கு புடித்திருந்தால் லைக் மற்றும் கருத்துக்களை பதிவிடலாம். இது எங்களை மேலும் சந்தோசபடுத்தும்.

Check Also

கனவு என்றால் என்ன ?

கனவு என்றால் என்ன? தூங்கும் போது நாம் காணும் காட்சிகள், ஓசைகள், உணர்வுகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளை கனவு …